Transgenders: கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடக்கும். அப்போது சில தொண்டு நிறுவனங்கள் கோயிலுக்கு மிக அருகில் ஆணுறை பெட்டி வைப்பது வழக்கம். அங்கு ஆணுறை பெட்டிகள் வைப்பதை தடை செய்ய வேண்டும் என கேட்டு திருநங்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மக்கள் நம்பிக்கையாக இருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் உலகப் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் சித்திரைத் திருவிழா முடிந்த பிறகு அந்த கிராமத்தில் கிடக்கும் ஆணுறையை குழந்தைகள் எடுத்து விளையாடுவதும், பொதுமக்கள் அதை பார்த்து கூச்சத்துடனும் செல்லும் நிலை நீடிக்கிறது.
உலகப் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலுக்கு வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் சித்திரைத் திருவிழா பார்க்க வருவார்கள் என்பதால் கோயில் அருகாமையில் ஆணுறை பெட்டி வைக்கத் தடை விதிக்க வேண்டும் என திருநங்கைகள் மனுவில் கூறியுள்ளனர்.