Sun Heat: வடக்கு ஆப்பிரிக்க நாடு துனிசியா. அரபு மொழி பேசும் பெர்பர் இன மக்கள் வாழும் சிறிய நகரம் இந்த நாட்டில் உள்ளது. matmata என்பது அந்த ஊரின் பெயர். தெற்கு துனிசியாவின் வறண்ட பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ளது இந்த நகரம். வறண்ட நிலத்தில் வெப்பத்தில் வாழ முடியாத காரணத்தால் இங்குள்ள மக்கள் நிலத்தின் அடியில் மண்ணை தோண்டி வாழ தொடங்கினர்.
எளிய கருவிகளை கொண்டு தோண்டக்கூடிய அளவுக்கு மென்மையாக இருக்கும் மணல் கல்லில் முதலில் ஆழமான வட்டக் குழியைத் தோண்டி வீடுகள் கட்டுகின்றனர். குகையின் விளிம்புகளைச் சுற்றி தோண்டப்பட்டு நிலத்தடி அறைகளை உருவாக்கி வீட்டின் அமைப்பை கொண்டு வருகின்றனர். இந்த கட்டுமானமானது பகலில் வெப்பத்திலிருந்து தப்பிக்க உதவியது. ஆனால் 1960ல் பெய்த கனமழை வெள்ளத்தில் நிலத்தடி குடியிருப்புகள் கொஞ்சம் சேதமடைந்துள்ளது. இருப்பினும் இன்றைய சூழலில் இந்த வீடுகள் அனைத்து நவீன வசதிகளுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.