ரசிகர்கள் கூட்டத்தின் நடுவே சிக்கிய திரிஷா!

26

விஜய் – திரிஷா நடித்த கில்லி படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். விஜய், அஜித் என தொடர்ந்து டாப் ஹீரோ படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இப்போது மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் ஈரோடு மாவட்டம் பவானியில் நடைபெற்று வருகிறது.

அங்கு கேரவனில் இருந்த திரிஷாவை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர். அவர்களுக்காக வெளியே வந்த திரிஷா கையசைத்து இருக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி இருக்கிறது.