Swimming: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ராமலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மகன் சுந்தரமூர்த்தி. விடுமுறை என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து வைகை அணைக்கு முன்புறம் உள்ள தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளனர். குளித்து கொண்டிருக்கும்போது தடுப்பணைக்கு முன்புள்ள ஆற்றுசுழலில் சிக்கினர்.
லோகேஸ்வரன், சுந்தரமூர்த்தி ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். உடன் இருந்த நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வைகை அணை காவல்துறையினர் தீயணைப்பு துறை உதவியுடன் தண்ணீரில் மூழ்கிய இரண்டு கல்லூரி மாணவர்களின் உடல்களை மீட்டனர்.
தடுப்பனையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.