Udhayanidhi Stalin: தர்மபுரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் மணியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், கடும் நிதி நெருக்கடியில் திமுக ஆட்சிக்கு வந்தது.
அப்போது பெட்ரோல் விலையை 2 ரூபாய் குறைத்தோம். தேர்தல் நேரத்தில் மட்டும் தான் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருவார். மகளிர் கட்டணமில்லா பேருந்தில் பெண்கள் கோடி கணக்கான முறை சென்றுள்ளனர் என உதயநிதி பேசினார்.
அப்போது புடவை வாங்கி தாங்க என அமைச்சர் உதயநிதியிடம் பெண் ஒருவர் கேட்டார். உடனே உதயநிதி அம்மா வணக்கம். பிரசாரத்திற்கு வருவதற்கு முன்பே சொல்லி இருந்தால் புடவை வாங்கிட்டு வந்து இருப்பேன். இப்போது என்னிடம் புடவை இல்லை என கூறினார். பிறகு புடவை கேட்ட பெண்ணுக்கு வாகனத்தில் இருந்த துண்டு கொடுத்து சமாளித்துவிட்டு கிளம்பினார்.