Udhayanidhi: தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழியை ஆதரித்து கோவில்பட்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். திமுகவுக்கு நீங்கள் போடும் ஓட்டு தான் பிரதமர் மோடிக்கு வைக்கும் வேட்டு. கடந்த மக்களவை தேர்தலில் என் அத்தை கனிமொழியை 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள். இந்த முறை அதைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறவைக்க வேண்டும். குறைந்தது 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். எந்த கொம்பானாக இருந்தாலும் டெபாசிட் இழக்க வைக்க வேண்டும் என பேசினார்.
அப்போது கூட்டத்தில் இருந்தவர் ஒருவர் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசினார். அவரை தடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீ கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டு போய்டுவ. அப்புறம் என் மேல வழக்கு போடுவாங்க. இனி பிரதமர் நரேந்திர மோடியை அவர் பெயர் சொல்லி அழைக்க வேண்டாம். இனி 29 பைசா என்று தான் அழைக்க வேண்டும். பாஜகவினர் வந்தால் இனி மிஸ்டர் 29 எப்படி இருக்கிறார் என்று கேளுங்கள் என உதயநிதி கூறினார்.