VCK: மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகள் 400 இடங்களில் வெற்றி பெற்றால் ஒரு வாரத்தில் திமுக ஆட்சியை கலைப்பார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சென்னையில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர் மோடி மீண்டும் பிரதமரானால் இனி வரும் காலங்களில் தேர்தல்கள் நடக்காது.
மாநில ஆட்சிகள் கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்படும். இந்நாட்டையும் மக்களையும் காப்பாற்ற இந்தியா முழுவதும் இண்டியா கூட்டணி கட்சிகள் வெற்றி பெற வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒரு வாரத்தில் திமுக ஆட்சி கலைக்கப்படும் என திருமாவளவன் கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.