தளப”தீ” GOAT படப்பிடிப்பு தளத்தில் கசிந்த வீடியோ!

34

GOAT: நடிகர் விஜய் தன்னுடைய 68வது படத்தில் நடித்து வருகிறார். AGS நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்ட செலவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வருகிறது அந்த படம். படத்துக்கு GOAT என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜயுடன் சேர்ந்து பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி நடிக்கின்றனர்.

நவீன டெக்னாலஜியுடன் தயாராகி வரும் இப்படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் ஏகபோக உற்சாகத்தில் குத்தாட்டம் போட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் GOAT படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே செல்கிறது. இப்போது படப்பிடிப்பு வேலைகளுக்கு நடுவில் நடிகர் விஜய் கூலாக ஸ்கேட்டிங் செய்து சில் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது.