இனி செல்போனும் பறக்குமா? அதிரி புதிரி இறக்கும் Vivo!

75

vivo drone camera phone: Vivo செல்போன் நிறுவனம் விரைவில் பறக்கும் கேமரா அம்சம் கொண்ட ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகப்படுத்த உள்ளதாம்.

விவோ டிசைன் செய்துள்ள இந்த புதிய பறக்கும் கேமராபோன் பார்க்க வழக்கமான ஸ்மார்ட்போன் போல தான் தெரியும். போனிற்குள் ஒரு மினி ட்ரோன் கருவியை இன்பில்டாக மறைத்து வைத்துள்ளது. இந்த ட்ரோனில் 200MP திறன் வரை வீடியோ எடுக்க கூடிய ஒரு மைக்ரோ கேமராவை விவோ உருவாக்கியுள்ளது. இந்த போனின் பின்புறத்தில் வழக்கமான ட்ரிபிள் கேமரா அம்சமும் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.

இந்த வடிவமைப்பிற்கான டிசைனை விவோ நிறுவனம் 2020ல் சமர்ப்பித்து உரிமையை வாங்கி கொண்டது. நான்கு வருட நீண்ட போராட்டத்திற்கு பிறகு வெற்றிகரமாக போனில் இருந்து பிரிந்து செயல்படும் ஒரு பறக்கும் கேமராவை விவோ இப்போது உருவாக்கியுள்ளது. பறக்கும் பொழுது மோதாமல் இருக்க ஆட்டோமேட்டிக் டிடெக்சன் அம்சமும் இதில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.