கொரோனாவுக்கே ஹெட்மாஸ்டர்: 100ல் 50 பேரை கொல்லுமாம் – Bird flu

38

Bird flu: H5N1 எனப்படும் பறவை காய்ச்சல் இப்போது பரவி வருகிறது. இது கொரோனாவை விட 100 மடங்கு ஆபத்தானது என கூறப்படுகிறது. உலகம் முழுவதும் இந்த நோய் பரவினால் அதிக மரணங்கள் நிகழும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கொரோனா போல இந்த நோய் மனிதர்களிடம் எளிதாக பரவாது. ஆனால் மனிதர்களுக்கும் இந்த பறவைக் காய்ச்சல் பரவினால் மிக கடுமையாக பாதிப்பை உண்டாக்கும். 2003 வரை இந்த வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட 100 பேரில் 52 பேர் இறந்து போனதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. கொரோனா தொற்றின் ஆரம்ப காலங்களில் பாதிக்கப்பட்டவர்களில் 20 சதவீதத்தினரே இறந்தனர்.

ஆனால் இப்போது பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. காய்ச்சல், சளி, தொண்டை வலி, தசைகளில் வலி, தலைவலி, மூச்சு விடுவதில் சிரமம், வயிற்றுப்போக்கு, வாந்தி, மூக்கில் ரத்தம் வடிவது, நரம்பு தொடர்பான பிரச்சனை இதன் அறிகுறியாகும்.