7 கோடி அக்கவுண்ட்களுக்கு தடை! யாரெல்லாம் லிஸ்ட்டில்?

22

சுமார் 7 கோடி வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை தடை செய்துள்ளதாக மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் இது நடந்துள்ளது.

மோசடி மற்றும் தேவையற்ற விளம்பர தொந்தரவுகள் குறித்து தங்களுக்கு கிடைக்கும் அனைத்துவிதமான குற்றச்சாட்டுகளையும் தீவிரமாக விசாரணை செய்து வருவதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021ன் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துவெளியிடப்பட்ட அறிக்கையில் தான் இந்தியாவில் சுமார் ஏழு கோடி அக்கவுண்ட்கள் தடை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.