வாட்ஸ் அப் செயலில் ஸ்டேட்ஸில் ஹார்ட் வடிவ லைக் ஆப்சன் விரைவில் வர உள்ளது. இது ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் உள்ளது. நீங்கள் ரியாக்ட் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் செய்யலாம். அதைவிட ஒரு போஸ்ட் பிடித்துள்ளது என்பதை ஒரு லைக் மூலம் தெரிவிக்கலாம். இந்த வசதியும் ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு முதலில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்பில் புதிதாக நியர்பை ஷேர் என்ற வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம், ஃபோட்டோ, வீடியோ, ஃபைல் உள்ளிட்டவற்றை எளிதாக ஷேர் செய்ய முடியும்.
ப்ளூடூத் பயன்படும் முறையிலேயே இதுவும் இயங்கும். நியர்பை ஷேர் ஆப்சனை ஆன் செய்தால், அது மற்றொரு வாட்ஸ் அப் அக்கவுண்ட் உடன் லிங்க் செய்ய அனுமதி கேட்கும். இரண்டு டிவைஸ்களும் லிங்க் செய்துவிட்டால் தொடர்பு எண்கள், போட்டோக்கள், வீடியோக்கள் என முக்கியமான டாக்குமெண்ட்களை ஷேர் செய்யலாம். இதற்கு இன்டர்நெட் தேவைப்படாது