Iran Ship Kerala Women: ஈரான், இஸ்ரேல் இடையே மோதல் முற்றியுள்ளது. இஸ்ரேலுடன் தொடர்புடைய சரக்கு கப்பலை ஈரானின் கடற்படையான இஸ்லாமிய புரட்சிக் காவல் படை கடந்த 13ம் தேதி சிறைபிடித்தது. அந்த கப்பலில் இருந்த 17 பேர் இந்தியர்கள் என தகவல் வெளியானது.
இந்தியர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது. ஈரான் வெளியுறவு அமைச்சரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொடர்புகொண்டு பேசினார்.
இப்போது ஈரான் ராவணுவத்தால் கடந்த வாரம் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 17 இந்தியர்களில் ஒருவரான பெண் பணியாளர் ஆன் தேஸ்ஸா ஜோசப் பாதுகாப்பாக கொச்சி திரும்பியுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீதி 16 இந்தியர்களுடன் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் தொடர்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.