சீன மொழி தெரிந்தால் தான் அரசு பேருந்தில் ஏற முடியும்!

29

தமிழக அரசு பேருந்துகளில் டிஜிட்டல் பெயர் பலகைகள் பயன்பாட்டில் உள்ளன. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் ஊர் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அதை பார்த்து பயணிகள் தாங்கள் செல்லும் ஊர்களுக்கு செல்கின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் பொள்ளாச்சிக்கு அரசு பேருந்து கிளம்பியது.

பேருந்தின் பின் பகுதியில் உள்ள டிஜிட்டல் பெயர் பலகைகளில் தமிழும் இல்லாமல், ஆங்கிலமும் இல்லாமல் வித்தியாசமான மொழியிலிருப்பது போன்று ஊர் பெயர்கள் பதிவாகியிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் திக்குமுக்காடி போனார்கள்.

சிலர் கண்டக்டர், டிரைவரிடம் பேருந்து எந்த ஊருக்கு செல்கிறது என கேட்டு ஏறினர். தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டதாகவும், டிஜிட்டல் புரோகிராமை மாற்றியதும் இயல்பு நிலைக்கு வந்துவிடும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.