பிஹார் மாநிலம் ஜமுய் மாவட்டம் அம்பா கிராமத்தில் பாலத்தின் அடியில் உள்ள கால்வாயில் இளம்பெண் உடல் கிடந்துள்ளது இதைப் பார்த்த பொதுமக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் பெண்ணின் உடலை கால்வாயில் இருந்து மீட்டனர்.
அப்போது உடல் தலை இல்லாமல் அரை நிர்வாண நிலையில் இருந்தது. அத்துடன் அந்த பகுதியில் மதுபானம், தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் கிடந்தன. இதனால் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு தலையை துண்டித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் பெண்ணின் தலையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.